Friday, October 2, 2009

இளமை தரும் மூலிகைகள்

1. பொன்னாங்கண்ணி

பொன்+காண்+நீ உடல் பொன் நிறத்தை கொடுக்கும்.

புரதம், இரும்பு, சுண்ணம்பு சத்துக்கள் நிறைந்தது. குளிர்ச்சி தரக்கூடியது

கண் சம்பந்த பட்ட பாதிப்புக்களை போக்கும். கண்டிப்பாக இவைகள்
நடக்கும். அதை நீ பார் என்று அதன் பெயரிலேயே உள்ளது.


2. மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை

மஞ்சள்+கரிசல்+கண்+நீ

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் இந்தக் கீரையை சாப்பிட்டால் மஞ்சள்
காமாலை நோய் வெகு விரைவில் குணமாகும். தலைமுடி
நரைத்திருந்தாலோஅல்லது செம்பட்டையாக இருந்திருந்தாலோ இந்த
கீரையை அரைத்து தலையில் தடவ வேண்டும். அல்லது கரிசலாங்கண்ணி
தைலம் வாங்கி தேய்த்து வந்தால் தலைமுடி கரிய நிறத்தை அடையும்.

கண் பார்வை அதிகரிக்க வேண்டுமானால் கரிசலாங்கண்ணி கீரையை
சாப்பிட்டு வந்தால் நன்கு பார்வை அதிகரிக்கும்.


3. வல்லாரை கீரை

வல்லார் ‍ ‍ அறிவில் சிறந்தவர்
வல்லவர் ‍ பலம் உடையவர்

வல்லாரைக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தியை அதிகரிக்கச்
செய்யும். பள்ளி மாணவ மாணவிகள் கண்டிப்பாக வல்லாரைக் கீரை
சாப்பிட வேண்டும். அவர்களுக்கு ஞாபக சக்தியை அதிகரிப்பதுடன் அறிவுத்
திறனையும், உடல் பலத்தையும் அதிகரிக்கச் செய்யும்.


4. கறிவேப்பிலை

கறிவேப்பிலையை உணவில் பயன் படுத்தினால் பித்தைதை தணிக்கும்.
பசியின்மையை போக்கும், வயிற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும்.
தலைமுடி நரைத்திருந்தால் கறிவேப்பிலையை அரைத்து தலையில்
தடவி வரலாம் அல்லது உணவில் கலந்து சாப்பிட்டு வரலாம்.
கறிவேப்பிலையைச் சாப்பிட்டு வருவதால் உடல் என்றுமே
ஆரோக்கியமாக இருக்கும். உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியாக இருக்க
வைக்கும். ஆகவே உணவில் உள்ள கறிவேப்பிலையை தூக்கி எறியாமல்
சாப்பிடுங்கள்

No comments:

Post a Comment