Thursday, October 8, 2009

அழகின் முகவரி

பேஷியல் :

ஒரு ஸ்பூன் தயிரில் ஒரு சொட்டு எலுமிச்சை சாற்றைக் கலக்க வேண்டும். கூடவே ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தின் மீது மசாஜ் செய்யவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து தண்ணீர் விட்டு கழுவுங்கள். தொடர்ந்து ஒரு மாதம் முகம் பளபளவென்று ப்ரெஷ்ஷாகிவிடும். எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உண்டு. அதனால் கலக்கும் போது கவனம் தேவை. அதிகம் சேர்த்தால் முகத்தில் எரிச்சல் அல்லது நமைச்சல் உண்டாகும்.

புருவம் அடர்த்தியாக

பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை புருவ அடர்த்திக்காக "மசாஜ் பார்லர்" செல்பவரா
நீங்கள்? அதற்க்கு அவசியமே இல்லை. கடையில் கிடைக்கும் 'ஐப்ரோ' பென்சில் நுனியில் விளக்கெண்ணையில் தொட்டு, உறங்கும் முன்பு புருவத்தில் தடவுங்கள். போதும்.

எண்ணெய் சருமம்

என்ன தான் 'மேக்கப்' போட்டாலும், சிலரது முகம் எண்ணெய் கத்தரிக்காய் போல் இருப்பது தவிர்க்க முடியாது. முட்டையின் வெள்ளைக் கருவை தனியே பிரித்தெடுத்து, மூன்று நாட்களுக்கு ஒருமுறை தடவி வந்தால், முகம் பளபளப்படைவது உறுதி.

உதடு

'லிப்ஸ்'டிக்கை ஓரமாக வையுங்கள். கொத்தமல்லி அல்லது பீட்ருட்டை சாறு எடுத்து, உதட்டின் மீது தடவுங்கள். 'கிச்சனில்' வேலை பார்க்கும் பெண்களுக்கு உதடு உலர்ந்து போவதுண்டு. அவர்கள் இந்த முறையை முயற்சி செய்யாலாம். உதட்டில் சிவப்பு நிறம் டாலடிப்பது நிச்சயம்.

தலைமுடி

தலைமுடியை மயில் தோகையாக்க முயற்சித்துத் தோற்றுப் போனவரா நீங்கள்? இரவில் தூங்கும் முன்பு அல்மண்ட் அல்லது ஆலிவ் எண்ணையைத் தலையில் தடவி விட்டுத் தூங்க செல்லுங்கள். காலையில் குளிப்பதற்க்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு சுத்தம் செய்யுங்கள் போதும்.

நன்றி : குமுதம் (பியுட்டி ஸ்பெஷல்)


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்னெய்
ஆகியவைகளை நான்கு ஸ்பூன் வீதம் எடுத்துக் கொண்டு
மிதமாக சூடாக்கி தலையில் மயிர்கால்களில் தடவ வேண்டும்.
விரல் நுனியால் மெதுவாக தேய்க்க வேண்டும்.
பின்னர் வென்னீரில் டவலை நனைத்து தலையில் சுற்றி கட்ட
வேண்டும். கூந்தல் வறட்சி நீங்கும். முடியும் செழித்து
வலரும். மேலே சொன்ன மூன்று எண்ணெய் கலவை முடி
பளபளப்பாக்க உதவும்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அரைத்த பாசிப் பருப்பு, முட்டையின் வெள்ளைக்கரு, தயிர்
மூன்றையும் சேர்த்து தலையில் தடவி வந்தால் தலைமுடிக்கு
சத்துடன் பளபளப்பும் உண்டாகும், முடி உதிராது.


நன்றி : யோகக்கலை (11.2009)

வால் மிளகை பாலில் ஊறவைத்து
அரத்து தலையில் தடவி பதினைந்து
நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர்
தலையை அலசினால் பொடுகுகள் மறையும்.

No comments:

Post a Comment