Tuesday, August 17, 2010

சமையல்

வெண்டைக்காய் தோசை

வழக்கமாக இட்லி, தோசைக்கு மாவு அரைப்பதுபோல் அரைக்க வேண்டும். அதில் உளுந்தைக் குறைத்துக் கொண்டு தேவையான அளவு வெண்டைக்காயை சிறு துன்டுகளாக நறுக்கி சேர்த்து அரைக்க வேண்டும். பின்னர் அந்த மாவில் பதமான தோசைகளாக வார்க்க வேண்டும். முறுகலான தோசை செய்தால் வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள் அழிந்துவிடும்.

இந்த வெண்டைக்காய் தோசைக்கு தொட்டு கொள்ள வல்லாரை கீரையுடன் தேங்காய், கடலை சேர்த்து வல்லாரை சட்னி செய்து கொண்டால் ஒரு முழுமையான நினைவாற்றல் உணவு தயார்.

படிக்கும் மாண‌வர்களுக்கு இதனை பக்குவமாகவும் சுவையாகவும் செய்து சாப்பிடத் தரவேண்டும். வெண்டைக்காய், வல்லாரை இந்த இரண்டும் நினைவாற்றலை வளர்க்க உடவும் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் நீக்கி மாவுப்பொருள் உடலில் தேங்கதவாறு வெளியேற்றிவிடும். இதனால், மாணவர்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும்

கேள்வி பதில்கள்

நான் படித்த சில கேல்வி பதில்கள் உங்கள் பார்வைக்கு

யோகியின் பதில்கள்

கேள்வி : காய்ச்சல் இருக்கும்போது நாக்கு கசப்பாக இருப்பது ஏன்?

பதில் : காய்ச்சல் என்பதே நமது உடலிலுள்ள கழிவுப் பொருள்கள் வெளியேறும்போது
ஏற்படும் ஒரு நோய் ஆகும். எனவே கண், காது, மூக்கு, நாக்கு என்று ஐம்புலன்கள்
வழியாக நச்சுப் பொருள்கள் வெளியேறும்போது நாக்கில் கசப்பு உணர்ச்சி தோன்றுகிறது.
அதுமட்டுமல்ல, நாக்கில் அமைந்துள்ள சுவை உணர்வு நரம்புகள்,
ஓய்வெடுத்துக்கொள்வதால் காய்ச்சலின்போது உணவு உண்ணக்கூடாது என்பதையும் நமது
உடல் சூசகமாக உணர்த்துகின்றது.

Monday, August 16, 2010

மனித உடல் உறுப்பு கடிகாரம்

அக்குபஞ்சர் சித்தாந்தபடி மனித உடலில் உள்ள முக்கியமான
12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 மணி நேரம் அதனுடைய
உயிர் சக்தி ஓட்டத்தின் உச்ச கட்ட இயக்கத்தில் இருக்கும். ஒரு
மனிதனின் உடல்நிலை நன்றாகவோ அல்லது நோய்வாய்படுவதோ
இந்த உயிர் சக்தி ஓட்டத்தின் தன்மையை பொறுத்ததேயாகும்.

அதிகாலை 3-5மணி ~‍ நுரையீரல்:

இந்நேரத்தில் எழுவது உடல் நலத்திற்கு மிகவும் நன்று.யோகாசனம்,
மூச்சுபயிற்சி, தியானம் போன்றவைகளை இந்நேரத்தில் செய்வது
மிகவும் நல்லது. காரணம் விடியற்காலை 3.30 மணியிலிருந்து 5 மணி
வரை வெட்ட வெளியில் அமுதகாற்று(ஓசோன்) ஒன்று வீசுகின்றது.
அந்த நேரத்தில் எழுந்து தியானம் செய்வதால் நாம் ஒரு புதிய
சக்தியைப் பெறுவோம். ஆஸ்துமா நோயாளிகளால் இந்த நேரத்தில்
தூங்க முடியாது. மூச்சுவிட இயலாது. சிரமப்படுவர்.

காலை 5-7மணி ‍~ பெருங்குடல் :

இந்நேரத்தில் கண்டிப்பாக எழுந்திருக்க வேண்டும். இந்நேரத்தில்
எழுந்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக மலச்சிக்கல் இருக்காது. மலம் கழித்து
குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். அதனால் நரம்புதளர்ச்சி ஏற்படாது.

காலை 7-9மணி ~‍ வயிறு :

கண்டிப்பாக இந்நேரத்தில் காலை உணவை முடித்திருக்க வேண்டும்.

காலை 9-11மணி ‍ ~ மண்ணீரல் :

மிகச்சிறிய சிற்றுண்டியோ, பானங்களோ அல்லது தண்ணீர்கூட
இந்நேரத்தில் சாப்பிடக்கூடாது. அப்படி ஏதாவது சாப்பிட்டால்
மண்ணீரலில் பாதிப்பு ஏற்பட்டு உடலில் உஷ்ணம் அதிகரிக்கும்.
மேலும் நாம் அந்நேரத்தில் உண்ணும் உணவு, நீர் ஆகியவை
வயிற்றில் ஜீரணிக்க நெடுநேரம் எடுத்துக்கொள்கிறது. உணவின்
ஜீரணத்தில் மண்ணீரலின் பங்கு பற்றிநமக்கு தெரிந்ததே. உணவு
சாப்பிட்டதும் ஏற்பட வேண்டிய சுறுசுறுப்பிற்கும், புத்துணர்விற்கும்
பதிலாக அசதியும், தூக்கமும் இந்நேரத்தில் அவர்களை ஆட்கொள்ளும்.
நாளடைவில் பசி குறையும். நீரிழிவு நோயளிகளுக்கு தொந்திரவு அதிகரிக்கும்
நேரமிது. (படபட‌ப்பு, மயக்கம், தூக்க கலக்கம் ஏற்படும்).

நண்பகல் 11-1மணி ~ இருதயம் :

கடினமாக வேலை ஏதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடித்து உடலை சாந்தப்படுத்திக் கொள்ளலாம். நகரத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் விழிப்புடன் இருக்கும் நேரமிது. காரணம் இந்த நேரத்தில்தான் இருதய நோயளிகளுக்கும், சக்கரை நோயளிகளுக்கும் மாரடைப்பு ஏற்படும் சாத்தியகூறுகள் அதிகம் இருக்கும். அத‌னால் அதை தவிர்க்க இவர்கள் இந்த நேரத்தில் படுத்து தூங்காமல் இருக்க வேண்டும். அப்படி தூங்கினால் அபான வாயு பிராண வாயுடன் கலந்து மாரடைப்பை ஏற்படுத்தும் அல்லது முகவாதம் அல்லது பக்கவாதம் அல்லது மூட்டுவாதம் மற்றும் உடல் வலிகள் நிச்சயம் தோன்றும்.

பகல் 1-3மணி ~‍ சிறுகுடல் :

மதிய உணவை முடித்து 3௫-5 நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். படுத்து உறங்குவதை இந்நேரத்தில் தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் 3-5மணி ~‍ சிறுநீர்ப்பை

பானங்களோ அல்லது தண்ணீரோ அருந்த உகந்த நேரம். முதுகுவலி, இடுப்புவலி வரும் நேரம்.


மாலை 5-7ம‌ணி ~ ‍ சிறுநீர‌க‌ம் :

வ‌ழ‌க்க‌மான‌ வேலையிலிருந்து விடுப‌ட்டு இர‌வுக்கு முன்பாக‌வே வீடு வ‌ந்து சேர‌வேண்டும். ரீன‌ல் பெயிலிய‌ர் முத‌ல் நீர்க்க‌டுப்பு வ‌ரை ஏற்ப‌டும்.

இர‌வு 7-9ம‌ணி ~‍ இத‌ய‌ மேலுறை :

இந்நேர‌த்தில் க‌ண்டிப்பாக‌ இர‌வு உண‌வை முடித்திருக்க‌ வேன்டும். மார்பு வ‌லி, பார‌ம், ப‌ட‌ப‌ப்பு தோன்றும்.

இர‌வு 9-11ம‌ணி ~‍‍‍ முன்று வெப்ப‌மூட்டி :

காலை முத‌ல் மாலை வ‌ரை உழைத்து க‌ளைத்த‌ ம‌னித‌ உறுப்புக‌ளுக்கு ஓய்வு த‌ர‌ வேண்டிய‌ நேர‌ம். இந்நேர‌த்திற்கு பின் க‌ண் விழித்திருத்த‌லோ, ப‌டிப்ப‌தோ கூடாது.


ந‌டுநிசி 11-1 ம‌ணி ~‍ பித்த‌ப்பை :

இந்நேர‌த்திற்குள் க‌ண்டிப்பாக‌ தூங்கிக் கொண்டிருக்க‌ வேண்டும். இந்நேர‌த்தில் விழித்திருந்தால், அடுத்த நாள் உங்க‌ள் முழு ச‌க்தியை இழ‌க்க‌ நேரிடும்.

மிக‌ அதிகாலை 1-3மணி ~ க‌ல்லீர‌ல் :

இந்நேர‌த்தில் ஆழ்ந்த‌ நித்திரையில் இருக்க‌ வேண்டும். இந்நேர‌த்தில் விழித்திருந்தால் க‌ண்டிப்பாக‌ க‌ண்ணின் பார்வை ச‌க்தி குறையும். உற‌க்க‌ம் பாதிக்கும் உட‌ல் அரிப்பு, ந‌மைச்ச‌ல் அதிக‌ரிக்கும்.

மேற்க்க‌ண்ட‌ நேர‌ங்க‌ளில் ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்களை கொண்ட‌வ‌ர்க‌ள் யோகாச‌ன‌ ப‌யிற்சிக‌ளை முறையாக‌ க‌ற்று ப‌ழ‌கி வ‌ந்தால் நோய்க‌ள் ஏற்ப‌டாம‌ல் குறைவ‌ற்ற‌ செல்வ‌த்தை பெறுவ‌ர்! ஏனெனில், நோய‌ற்ற‌ வாழ்வுதானே குறைவ‌ற்ற‌ செல்வ‌ம்!

ந‌ன்றி : யோக‌க்க‌லை ‍ ஆக‌ஸ்ட்'10
Dr. ஏ.எஸ் அசோக்குமார்-Ph.d., (Y.Sc)

Tuesday, August 3, 2010

துன்பத்திலும் இன்பம்

மகிழ்ச்சியை நோக்கியே உலகம் இயங்குகிறது. 'மகிழ்ச்சி கிடைக்காது' எனில், ஒரு செயலைச் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. வழியெல்லாம் வலி இருந்தாலும், முடிவில் இன்பம் இருக்கும் எனில் அந்தச் செயலைச் செய்யலாம் எனும் அடிப்படைத் தத்துவ‌த்தில்தான்,சாக‌ச‌ம் புரியவும் சாதனை படைக்கவும் மானுடம் தொடர்ந்து முயற்ச்சி மேற்க்கொள்கிறது. அப்போது நேருகிற மரணத்தைக்கூட இன்பம் என்றெண்ணி மகிழ்கிற‌து.

மகிழ்ச்சியை களவாடுகிற உணர்ச்சி, கோபம். துக்கத்தில்கூட சிறிதேனும் மகிழ்ச்சி ஒட்டிக்கொண்டிருக்கும். ஆனால், கோபத்தில் துளியும் மகிழ்ச்சி இருப்பது இல்லை.வயதானவர்களாக இருந்தாலும், அவர்களது மரணம் துக்கத்தை ஏற்ப்படுத்தும். ஆனாலும் ' நல்ல சாவு' என மனம் கொஞ்ச‌ம் மகிழ்ச்சியுறும்.; கோபம் அப்படிப்பட்டதல்ல!

துக்கம் -‍ விரிசல்; கோபம் -‍ பிளவு. துக்கம் ‍- வெள்ளம்; கோபம் -‍ ஆழிப்பேரலை. கோபம் வருகிறபோதும், அதைப் பாதுகாக்கிற‌போதும், அதற்குப் பிறகு வெகுநேரம் அதையே எண்ணி, உடலின் ஒவ்வொரு அவயமும் படபடக்கும்;

இதயம் வேக‌மாக இயங்கும்; மூச்சு வாங்கும்; முகம் சிவக்கும்; நாக்கு வறளும்; நெஞ்ச‌‌ம் பதைபதைக்கும்; மலைமேல் ஏறும் மிதிவண்டிபோல நுரையீரல் திணறும். கோபம் மற‌‌‌ந்தாலும், அது ஏற்ப‌டுத்திய தடயங்கள் மட்டும் அப்படியே தங்கிவிடும்.

மேலாண்மை வகுப்புக்களில், 'கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?" என இன்றைக்கும் ஏகப்பட்ட வழிமுறைகளைச் சொல்லிதருகின்றனர். ஏனெனில், அதிகாரிகளின் கோபத்தால், அலுவலக இயக்கமே பாதிக்கப்பட்டுவிடும்.

சொந்த வாழ்வில் இயலாமைமற்றும் வெளியுலகில் எதிர்ப்பார்த்தது நிகழாதது ஆகியவற்றால் கோப‌ம் ஏற்படுகிற‌து. அந்த‌ ஆற்றாமையான‌து, புல‌ன்க‌ளின் வ‌ழியே வார்த்தைக‌ளாக‌ வ‌ழிந்தோடுகிற‌து. சின்ன‌தொரு ச‌ம்ப‌வ‌த்துக்கே ஒடிந்துவிடுப‌வ‌ர்க‌ள் உண்டு.

க‌ண‌வ‌ன் ம‌னைவி ம‌கிழ்ச்சியாக‌ இருந்த‌தைச் சொல்ல‌மாட்டார்க‌ள். என்றேனும் ஒருநாள், அவ‌ர்க‌ளின் புரித‌ல் பிச‌கானால், அவ‌ர்க‌ளின் கோப‌ம் பூத‌க‌ர‌மாக‌க் கிள‌ம்பி , பூக‌ம்ப‌ங்க‌ளை ஏற்ப்ப‌டுத்தும். 'இத்த‌னை நாள் எவ்வ‌ல‌வு அன்புட‌மன் ந‌ட‌ந்துக்கொண்டார்' என‌ப் ப‌ழைய‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை ஒரு நிமிட‌ம் நிநைத்துப் பார்த்தால், அந்த‌ பிற‌ழ்வைப் பெரிதுப‌டுத்தாம‌ல் சென்றுவிட‌லாம்.

உற‌வோ, ந‌ட்போ.... ஒருவ‌ர் ந‌ம்மைக் காய‌ப்ப‌டுத்தும்போது, அவ‌ர்க‌ள் அன்புட‌ன் ந‌ட‌ந்துக்கொண்ட‌ நிக‌ழ்வுக‌ளை நினைத்தால், ந‌ம‌து கோப‌மும் அத‌னால் ஏற்ப்ப‌டும் உளைச்ச‌லும் ச‌ம‌ன் செய்ய‌ப‌ட்டுவிடும். நாம் துன்ப‌த்தில் இருந்த‌போது அவ‌ர்க‌ளின் தோளில் சாய்ந்துகொண்ட‌ நினைவுக‌ளை எண்ணிப்பார்த்தால், அவ‌ர்க‌ள் மீது வ‌ன்ம‌ம் ஏற்ப‌ட‌ வாய்ப்புக‌ளே இருக்காது. நெருக்க‌டி நேர‌ங்க‌ளில் ந‌ம் அருகுல் இருந்து ஆறுத‌ல் சொன்ன‌ அவ‌ர்க‌ளை ஒரு க‌ண‌ம் நினைத்தால், ம‌ன‌தில் ம‌டிப்பு விழாது. முள் குத்திய‌த‌ற்காக‌க் காலை வெட்டி எறிவ‌துபோல் ந‌ட‌ந்துகொள்ளும் ந‌ம‌து செய‌ல்க‌ள்ந‌ம‌க்கு புல‌ப்ப‌ட‌ துவ‌ங்கும்.

ந‌ண்ப‌ர்க‌ளுக்குள் சின்ன‌ சின்ன‌ வ‌ருத்த‌ங்க‌ள் வ‌ருவ‌து இய‌ல்புதான். வ‌ருத்த‌மே வ‌ராத உற‌வுக‌ள் வ‌லுவான‌வை அல்ல‌ என்ப‌தே உண்மை. மேம்போக்கான‌ உற‌வுக‌ளில், எப்போதும் புன்ன‌கைதான். ஆழ‌மான‌ ப‌கிர்த‌லில் அவ்வ‌ப்போது மூச்சுத் திண‌றுவ‌தும் உண்டு. அவ‌ர்க‌ளை சமாதான‌ப் ப‌டுத்துவ‌து ந‌ம‌து க‌ட‌மை. ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் சின்ன‌ கார‌ண‌த்துக்காக‌ப் பிரிகிற‌போது, உல‌க‌ உள்ளுண‌ர்விலேயே ஒரு சுருக்க‌ம் நிக‌ழ்கிற‌து.

என‌க்கும் ந‌ண்ப‌ர் ஒருவருக்கும் , க‌ல்லுரியில் ப‌டிக்கும்போது சின்ன‌ ம‌ன‌த்தாங்க‌ல். எங்க‌ள‌து மூத்த‌ மாண‌வ‌ர் ஒருவ‌ருக்கு இந்த‌ விஷ‌ய‌ம் தெரிந்த‌து./ எப்போதும் ஒன்றாக‌வே... தும்முவ‌தைக்கூட‌ தாள‌க‌தியில் செய்கிற‌ எங்க‌ளின் பிண‌க்கு அவ‌ருக்கு வ‌ருத்தை த‌ர‌ , ஒருநாள் என்னை அழைத்த‌வ‌ர் , "உன் ந‌ண்ப‌ர் உன்ன‌ப்ப‌ற்றிப் பெருமையாக‌ச் சொன்னார். உன்னிட‌ம் பேச‌ அவ‌ருக்கு ஆசை" என்றார். ம‌றுநாள் அவ‌ர‌து அறைக்கு, எங்க‌ள் இருவ‌ரையும் தேநீர் அருந்த‌ அழைத்தார். அத‌ன்பிற‌கு எங்க‌ளின் ந‌ட்பு மீண்டும் ம‌ல‌ர்ந்த‌து. இன்றுவ‌ரை, எங்க‌ளின் தொட‌ர்பு ஜீவ‌ந‌தியாக‌ ஒடிக்கொண்டு இருக்கிற‌து.

கேள்விபட்ட சம்பவம் ஒன்று :
புதிதாக திருமணமான தம்பதியிடம், மணப்பெண்ணின் தாய் பரிசுப்பொருள் ஒன்றைத்
தந்தாள். பிரித்துத் பார்த்தால், அது அவர்கள் இருவரின் பெயரிலுமான வங்கிக் கணக்கு.
தாய் சொன்னாள் : "நீங்கள் இருவரும் எப்போதெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறீர்களோ, உங்களை ஆனந்தத்தில் ஆழ்த்துவது போலான சம்பவம் எப்போதெல்லம் நடக்கிறதோ, அந்த வேளையில், உங்களின் வங்கி கணக்கில் ஒருவர் பணம் போடவேண்டும். அதற்கான காரணத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இதை தவறாமல் செய்யுங்கள். சேமிக்க இது ஒரு சிறந்த வழி!"

இரண்டு வருடங்கள் இனிதே கழிந்தது தாம்பத்தியம். எப்போதும் மகிழ்ச்சி, கும்மாளம், கொண்டட்டம் எனப் போய்க்கொண்டு இருந்த மண வாழ்க்கையில், திடீரென இரண்டு பேருக்கிடையிலும் முளைத்தது கருத்து வேற்றுமை. ' இனி சேர்ந்து வாழ முடியாது' என அறிவிப்பில் மட்டும் ஒற்றுமையை கடைப்பிடித்தனர். நீதிமன்றம் செல்லவும் துணிந்தனர். 'பரஸ்பர ஒப்புதல்' மூலம் விரைவில் மண முறிவு பெறலாம் என எண்ணினர்.

அந்த பெண், தாயரிடம் சென்று சேதி சொன்னாள். "இனி சேர்ந்து வாழ முடியாது என முடிவெடுத்தால், பிரிய வேண்டியதுதான். ஆனல் அதற்குமுன், உங்களது பங்கினை சரியாக பிரித்துக்கொள்ளுங்கள். உங்களது இணைந்த வங்கி கணக்கில் உள்ள பணத்தில் நீ போட்ட பணத்தை நீயும், உன் கணவர் போட்ட பணத்தை அவரும் எடுத்துக் கொள்ளுங்கள்" என்றாள் தாயார்.

அதன்படி பீரோவுக்குள் வைத்திருந்த வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்துப் பார்த்தனர். மனைவிக்கு மேல்படிப்பில் வெற்றி கிடைத்ததும் அவளின் பெயரில் 20,000 ரூபாய் போட்டிருந்தான் கணவன். மனைவிக்கு நல்ல வேலை கிடைத்ததும் 10,000 ரூபாய் போட்டிருந்தான். அதேபோல், கணவனுக்கு பதவி உயர்வு கிடைத்த தருணத்தில் அவன் பெயரில் 10,000 ரூபாய் போட்டிருந்தாள் மனைவி. இப்படியான பதிவுகள் மூலம் மொத்தம் 2 லட்சம் ரூபாய் கணக்கில் இருந்தது.

ஒவ்வொரு பதிவும் அவர்கள் கொண்டாடிய நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன. அப்போது இருவரும் நெருக்கமாக, அன்பாக, உயிருக்கு உயிராக உணர்ந்த நொடிகள் நிழலாடின. அவற்ரை நினைக்க கண்ணீர் சுரந்தது. துணையை சிநேகத்துடன் உணரமுடிந்தது. பிரியப் போகிறோமே எனும் உண்மை உறுத்தியது.
இவ்வளவு நெருக்கத்தையும் எப்படி நம்மால் தூக்கி எறியவும், மரக்கவும் முடிந்தது' என வருந்தினார்கள். இருந்தாலும் தன்முனைப்பு....'பனத்தை வங்கியிலிருந்து எடுத்து வருகிறேன்' என கிளம்பி சென்றவன், ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தான். வங்கி கணக்குப் புத்தகத்தைப் பிரித்து மனைவியிடம் தந்தான். அதில் அன்றைய தேதியில், 'இருவரும் மருபடி இணைந்ததற்காக' என்று எழுதி, 50,000 ரூபாய் செலுத்தப் பட்டிருந்தது.

தன்முனைப்பை சற்று தள்ளி வைத்ததும், தேவையற்ற‌ கோபத்தை ஒதுக்கி வைத்தும் வாழத் தெரிந்தால் மகிழ்ச்சி பொங்கும்; வருகின்ற கவலைகள் முகாமிடாமல் உடனே ஓடும்.

'நமது மகிழ்ச்சியை பலரிடமும் பகிர்ந்து கொள்ளலாம்; துக்கத்தை பகிர்ந்துக் கொள்ளக்கூடாது' எனும் சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று உண்டு. நண்பர்கள், நாம் பகிர்ந்து கொள்ளாமலேயே நமது துக்கத்தை உணர்வார்கள். அப்படி உணராதவர்கள் நண்பர்களே அல்லர். அவர்களிடம் பகிர்ந்துகொள்ளாததால் எந்த பதிப்பும் இல்லை.

அடுத்தவரின் மகிழ்ச்சியை குலைப்பதற்காகவே வாழ்ப்பவர்களும் உண்டு. அப்படிபட்டவர்கள், நம்மைப் பற்றி எவரேனும் அவதூறாகப் பேசினால், உடனே நம்மை தொலைப்பேசியில் தொடர்ப்பு கொண்டு சேதியை கக்குவார்கள். நல்லவிதமாக பேசியிருந்தாலோ, தெரிவிக்கவே மாட்டர்கள். நம்மிடம் நெருங்குவதற்காக, தீயவற்றை மட்டும் வடிகட்டி வழங்கி, நமக்கு நெருக்கமானவர்களாக நடித்து ஏமாற்றுவார். அவர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தாலே, 'ஏதோ கெட்ட சேதி ' எனத் தெரிந்துகொள்ளலாம். அவர்களின் எண்னை அலைப் பேசியில் பார்த்தாலே, நமக்கு நடுக்கம் வந்துவிடும்.

துன்பம் வரும்போது பக்குவத்துடன் எதிர் கொள்பவர், கோபப்படுவதில்லை. துன்பத்தைத் தனது சாமர்த்தியத்தால் கிள்ளி எறிந்துவிட்டு முன்னேறுவார். துன்பத்தை நாம் கொடுக்கும் முக்கியத்துவமே, அதை பெரிதாக்குகிறது!


எழுத்து : வெ. இறைய‌ன்பு

நன்றி : சக்தி விகடன் 25.07.10

Thursday, March 25, 2010

படித்து பயனுற‌

1. காலம் நன் கைகளில்

A.M.ராஜகோபாலன்,B.A
ஆஸ்தான வித்வான், Sriஅஹோபில மடம்
திருவரசு புத்தக நிலையம் (Rs100.00)


2. நீ நாளும் நினை நெஞ்சே

Wednesday, March 24, 2010

ஆன்மிகம்
அகரம், உகரம், மகரம் ஆகிய மூன்றும் சேர்ந்ததுபிரணவ
மந்திரமான 'ஓம்'. இந்த பிரணவத்தின்
வடிவானவர் முருகப்பெருமான்.

முருகன் என்ற திருநாமத்தில் 'மு' எனும் எழுத்து
முகுந்தனையும்; 'ரு' ருத்திரனையும்; 'க' பிரம்மனையும்
குறிக்கும். ஆகவே முருகனை வணங்க மும்மூர்த்திகளையும்
வழிபட்ட பலன் கிடைக்கும்.

முருகனின் ஆருமுகங்கள் : ஆறு பருவ காலங்களையும்;
பன்னிரண்டு திருக்கரங்கள் ‍ பன்னிரண்டு மாதங்களையும்
குறிக்கின்றனவாம்.

முருகப்பெருமானின் மயில் பறவையை 'சுத்த மாயை'
என்றும், மயிலின் வாயிலுள்ள பாம்பை ' அசுத்த மாயை'
என்றும், மயிலின் கால்களில் உள்ள பாம்பை 'பிரக்ருதி
மாயை' என்றும் ஞான நூல்கள் குறிப்பிடுகின்றன.

முருகனின் க‌ரங்களில் திகழும் ஈட்டி, கோடாரி, கத்தி, வில்,
பாசம், அங்குசனம், கொடி, வஜ்ரம், பாணம், மணி, தாமரை
ஆகிய பதினொன்றும் ஏகதாச ருத்ரர்கள் என்று ஞானநூல்கள்
கூறுகின்றன.

நன்றி : சக்தி விகடன்
(கே என் மகாலிங்கம் ‍ பாண்டிச்சேரி)

Tuesday, March 16, 2010

நவரத்தினங்கள்

வைரம் Diamond

வைடூரியம் Cat's eye, Lapis lazuli

முத்து Pearl

மரகதம் Emerald

மாணிக்கம் Ruby

பவளம் Coral

புட்பராகம் Topaz

கோமேதகம் Hessonite

நீலம் Sapphire

Wednesday, March 10, 2010

ஹோரை தோஷம்
கிரகங்கள் ஒன்பது. அதில் ராகு, கேது நீங்கலாக உள்ள 7
கிரகங்களுக்கு மட்டும் ஹோரை என்ற அமைப்பை ஏற்படுத்தி
உள்ளனர்.கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் அதனத‌ன் சுற்று
வேகம், சுற்றுபாதை இவைகளுக்கு ஏற்றாற்போல் தங்குகிறதோ,
அதுபோல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகமும் இரண்டரை
நாழிகை, அதாவது 1 மணி நேரம் தங்கி வலம் வருகிறது.
அனைத்து பஞ்சாங்கங்களிலும் ஒவ்வொரு கிழமைக்கும் கால
ஹோரை நாழிகை விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அறிந்துக்
கொள்ள ஏதுவாக இந்த குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

காலையில் சூரிய உதயம் ஆரம்பம் ஆகும் பொழுது அன்றைய
தின கிழமையின் கிரகமே முதல் ஹோரை ஆரம்பமாகும். அதாவது
ஞாயிறு காலை 6 மணி முதல் 7 மணி வரை சூரிய ஹோரை
ஆரம்பம் ஆகும். திங்கள் அன்று சந்திர ஹோரையும், செவ்வாய்
அன்று செவ்வாய் ஹோரையும், புதன் அன்று புதன் ஹோரையும்,
வியாழன் அன்று குரு ஹோரையும், வெள்ளி அன்று சுக்கிர ஹோரையும்,
சனி அன்று சனி ஹோரையும் ஆரம்பமாகும். இந்த ஹோரைகளை அன்றைய
சூரிய உதயத்தில் இருந்துதான் கணக்கிட வேண்டும். ஒவ்வொரு
ஹோரையும் கொடுக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் உள்ளன.
ஒவ்வொரு ஹோரையை வைத்து, அது சுப ஹோரையாக இருந்தால்,
சுபகாரியங்களை ஆரம்பிக்கலாம்.

சூரிய ஹோரை : உத்தியோகத்தில் சேர, அது தொடர்பான
பெரிய அதிகாரிகளை பார்ப்பது, பத்திரங்கள், உயில் எழுத, சிபாரிசுகள்
பெற சூரிய ஹோரையில் செய்யலாம். புது வீடு குடி போகக்கூடாது.

சந்திர ஹோரை : வியாபாபரத் தொழில் தொடங்க மற்றும்
முக்கியமான வியாபாரங்கள் செய்ய, யாத்திரை, வெளிநாடு செல்லும் யாத்திரை
தொடங்க, இந்த ஹோரை சுபமாகும். கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சந்திரனாக
இருந்தால் இவைகளை விலக்கலாம்.

செவ்வாய் ஹோரை : செவ்வாய் ஹோரையில் சுபகாரியங்களை
விலக்குவது நன்று. எந்த காரியத்தை செய்யும்போதும், நாம் பேசுகின்ற‌ பேச்சுக்களே
நமக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும்.

புத‌ன் ஹோரை : தொலைத் தொட‌ர்பு கொள்ள‌ த‌ந்தி, போன்,
பேக்ஸ்,இன்ட‌ர்நெட் ஆகிய‌வைக‌ளை உப‌யோக‌ப்படுத்த‌ ந‌ல்ல‌ நேர‌ம். வ‌ழ‌க்கு,
வியாஜ்ஜிய‌ம் தொட‌ர்பாக‌ வ‌க்கில்க‌ளைப் பார்க்க‌ ந‌ல்ல‌ நேர‌ம்.க‌தை, க‌ட்டுரைக‌ள்
எழுத‌,ஜாத‌க‌ம் பார்ப்ப‌து கூட‌ இந்த‌ நேர‌த்தில் பார்க்க‌லாம். புதிய‌ க‌ண‌க்கு தொட‌ங்க‌லாம்.
நில‌ம் வாங்க‌, பெண் பார்த்த‌ல் பேச‌க்கூடாது.

குரு ஹோரை : எடுத்த‌ காரிய‌ங்க‌ள் அனைத்தும் ந‌ன்மை ப‌ய‌க்கும்.
முகூர்த்த‌ நேர‌ம் அமையும் போது குரு ஹோரையில் அமைவ‌து மிக‌வும் விஷேச‌ம்.
ஆடை ஆப‌ர‌ண‌ங்க‌ள் வாங்க‌, திருமாங்க‌ல்ய‌த்துக்கு பொன் வாங்க‌ ஏற்ற‌ நேர‌ம். ந‌கை
க‌டை வியாபாரிக‌ள் இந்த‌ நேர‌ங்க‌ளில் க‌டை தொட‌ங்க‌வும், பெரிய‌ வியாபார‌ங்க‌ள் செய்ய‌வும் ஏற்றதாகும். முத‌ல் விருந்து கூடாது.

சுக்கிர‌ ஹோரை : சுப‌ காரிய‌ங்க‌ளுக்கு ஏற்ற நேர‌ம். திரும‌ண‌த்திற்க்கு
பெண் பார்க்க‌ சாந்தி முகூர்த்த‌ம் செய்ய‌ ஏற்ற நேர‌ம். சுக்கிர‌ ஹோரையில் சுப‌ நிக‌ழ்ச்சிக‌ள் யாவும் செய்ய‌லாம். விருந்து கொடுக்க‌வும், கொடுத்த‌ க‌ட‌னை வ‌சூல் செய்ய‌வும் முய‌ற்சிக்க‌லாம். புதிய வாக‌ன‌ங்க‌ள் வாங்க ஏற்ற‌ நேர‌ம். க‌ட‌ன் ம‌ட்டும் கொடுக்க‌க் கூடாது.

சனி ஹோரை : சனி ஹோரையில் வியாதிஸ்தர்கள் புதிதாக மருந்து உண்ணக்கூடாது. அவசியம் ஏற்ப்பட்டால் ஒழிய, மருத்துவமனைக்கு செல்லக்கூடாது. இந்த ஹோரை அசுப ஹோரை என்றாலும், நிலங்கள், மனைகள் வாங்க, விற்க முயற்ச்சிக்கலாம். அதுபற்றி பேசலாம். பிரயாணம் கூடாது.

செவ்வாய் ஹோரை, சனி ஹோரை, கிருஷ்ணபட்ச சந்திர ஹோரை ஆகியவைகள் அசுப ஹோரைகள் என்றும், குரு, சுக்கிர, சூரிய வளர்ப்பிறை சந்திரன் ஹோரைகள் சிறப்பாகவும் அமைக்கப்படுள்ளது.

குரு முதலில், அடுத்ததாக சுக்கிரன், அதற்கடுத்து புதன், அதற்கடுத்து சூரிய ஹோரை, கடைசியாக வளர்ப்பிறை சந்திரன் என்றும் வரிசைப்படுத்தப்படுள்ளது.

நன்றி : ஆன்மீகம் 11'2009

Monday, March 8, 2010

ஆன்மீகம்

தேவ‌ர்க‌ள் வ‌ண‌ங்கிய‌ லிங்க‌ங்க‌ள்

1. இந்திர‌ன் ‍ ப‌தும‌ராலிங்க‌ம்
2. எம‌த‌ர்மா கோமேத‌க‌லிங்க‌ம்
3. விஷ்ணு இந்திர லிங்கம்
4. வாயுதேவன் பித்தளை லிங்கம்
5. சந்திரன் முத்து லிங்கம்
6. பிரம்மா சொர்ண லிங்கம்
7. வருணன் நீல லிங்கம்
8. நாகர் பவள லிங்கம்
9. அசுவினி ‍ மண் லிங்கம்
10. ருத்திரங்கள் திருவெண்ணீற்று லிங்கம்
11. மகாலட்சுமி நெய் லிங்கம்
12. சரஸ்வதி ‍ மாணிக்க லிங்கம்


பரிவார ஸ்தலங்கள்

திருவிடைமருதூர் மூல லிங்க ஸ்தலம். இந்த ஸ்தலத்தை சுற்றி
திரு வலஞ்சுழி (விநாயகர்), சுவாமிமலை (முருகன்),
திருவாப்பாடி சண்டேசர்),சூரியனார் கோவில்(சூரியன்),
சிதம்பரம் (நடராசர்), சீர்காழி (பைரவர்), திருவாவடுதுறை(நந்தி),
திருவாருர்(சோமஸ்கந்தர்), திருவாலங்குடி(தட்சிணாமூர்த்தி)
ஆகிய ஸ்தலங்கள் பரிவார ஸ்தலங்களாக உள்ளன.

Monday, March 1, 2010

ப(பி)டித்த கவிதைகள்


சே
யாரங்கே...

என் கல்லறையின்மீது நின்றுகொண்டு,

எனக்காகக் கண்ணீர் வடிக்கும் அந்த

மெழுகுவர்த்திகளை

அணைத்துவிடுங்கள்..

அழுகை-

எனக்குப் பிடிக்காத ஒன்று..


-எர்னஸ்டோ சேகுவேராவின் நினைவுகளுக்கு அர்ப்பணம்

*************

கொட்டும் மழையில்
நனைந்துதான்
வருகிறாய்!!
ஆனால், துளிகூட‌
ஈரமில்லை உன்
மனதில்!

******

என்
கண்ணிருக்குத்தான்
எத்தனை
வெட்கம்!
நீ விலகிச்
சென்ற பிறகுதான்,
அது வெளியே
எட்டிப் பார்க்கிறது.
********

பேசினால் என்ன
என்று நான் கேட்க,
பேசினால் தானா
என்று நீ கேட்க,
கரைவது காசு
மட்டுமல்ல,
என் காதலும்தான்.
**********

என் வாழ்க்கையை விட்டு
விலகி செல்ல நான்
உன் பாதையல்ல‌
உன் பாதங்கள்!

*********

ஞாபக மறதி!

குரங்காட்டியின்
கோல் பிடித்து தாண்டும்
குறங்கிற்கு
நினைவில் இல்லை
தான் கடல் தாண்டிச்
சென்ற கதையும்
ஒரு நகரம் அழித்த கதையும்.

நன்றி : குமுதம் 10.03.2010

கையிலே இருக்கு... மருந்து
# வெள்ளைப்பூண்டை உணவில் அதிகம் சேர்ப்பவர்களுக்கு மலேரியா நோய் வராது.

# பூண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடலில் தேவையற்று சேரும் கொழுப்பு
குறையும்.

# உடல் கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டுக்குள் இருக்க, தினமும் காலையில் 4
வெள்ளைப்பூண்டுத் துண்டுகளை சாப்பிடுவது நல்லது.

# வலிப்பு வருகிற குழந்தைகளுக்கும், இருமல், சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும்
பூண்டு சாறு கொடுத்துவர மெல்ல மெல்ல குணம் பெறலாம்.

# இரைப்பு, இருமல், வயிற்றில் பூச்சி இருப்பவர்களுக்கு பூண்டு சாறுகளை சில துளிகள்
உள்ளுக்குள் சாப்பிட கொடுக்க எளிதில் குணம் கிடைக்கும்.

# டான்ஸில் என்கிற உள்நாக்கு வளர்ந்திருப்பவர்கள், அந்த வளர்ந்த உள்நாக்கு சதை
வளர்ச்சியின் மீது பூண்டுசாறினை தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

# பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட உடல் கொழுப்பு குறையும். ரத்தக்கொதிப்பு,
மனஅழுத்தம் போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு பூண்டு நல்ல மருந்து.

# பூண்டில் பலவித சத்துக்கள் இருந்தாலும் அதிகமாக இருப்பது கால்சியம்தான். எனவே
பூண்டை அதிகமாக சமையலில் பயன்படுத்துவதன் மூலமாக நாம் நமது எலும்பிற்கு
வருகின்ற பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

நன்றி : மாலை மலர்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஜலதோசம் நீங்க ...

வெங்காய வைத்தியம்

ஜலதோசத்தால் பாதிக்கபட்டவர்கள் சாம்பார் வெங்காயம் ஒன்று
அல்லது இரண்டினை இரவு படுக்கைக்குச் செல்லும் முன் நன்கு
மென்று தின்றுவிட்டு சுடுநீர் பருகிவிட்டு படுக்கைக்கு சென்றால்
காலையில் ஜலதோசம் பறந்துவிடும்.

நீரகாரம் சாப்பிடுபவர்கள் சாம்பார் வெங்காயத்தை பச்சையாகக்
கடித்து சாதத்தோடு உண்பதை பார்த்திருப்பீர்கள்.

சாலட்டில் பெரிய வெங்காயத்தை, காரட் துண்டுகளுடன் வட்டமாக‌
நறுக்கி வைத்திருப்பதையும் பார்த்திருப்பீர்கள். இதிலிருந்து ஜலதோசத்தை
தடுக்கும் சக்தி வெங்காயத்திற்க்கு இருப்பது புரிகிறதல்லவா!!

ஒரு டம்ளர் பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து இரவில் படுக்கைக்கு
செல்லும் முன்பு மிதமான சூட்டில் அருந்தினால், காலையில் ஜலதோசம்
பறந்து போகும்.

ஜலதோசம் உள்ளவர்கள் காபியில் சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து பருகலாம்.

கசகசாவை அரைத்து பாலில் கலந்து கொடுத்தால் ஜலதோசம் விலகும்ம்
மஞ்சளை சுட்டு அதிலிருந்து வரும் புகையை முகர்ந்தாலும் ஜலதோசம் குறையும்.

நன்றி : யோகக்கலை (11.2009)

Sunday, February 28, 2010

எழுதுகிறேன்...


உன் கண்களில்
உள்ள கத்தியால்
என் மனதை
காயம் செய்கிறாய்

என் மனதை
காயம் செய்வதில்
என்ன காண்கிறாய்???