Sunday, October 12, 2014

ஓடி ஓடி உழைக்கிறோம்

. ஓய்வில்லாமல் உழைக்கிறோம். சில சமயங்களில் உட்கார்ந்த்து சாப்பிட நேரம் இல்லை. உறவுகளிடம் பேச நேரம் இல்லை. எந்த விஷேசங்களிலும் கலந்துக்கொள்ளமுடியாமல் வீட்டில் என்ன நடக்கிறது தெரியாது பிள்ளைகளின் படிப்பு எப்படி தெரியாது.!! அவர்கள் சரியாக பள்ளிக்கு செல்கிறார்களா அது........அதை எல்லாம் அவங்க அம்மா பார்த்துக்குவாங்க அட நம்ம பிள்ளைகள் அவங்க சரியாகத்தான் இருப்பார்கள். இப்படி சிலசமயம் பதில்கள். ஆனால், ஓடி ஓடி உழைத்து சம்பாதிக்கும் பணம் எங்கே போகிறது என்றே தெரியாமல் ஏன் உழைக்கிறோம்.எங்களுக்கு பெரிய சம்பளம் இல்லைங்க. அப்போ பெரிய சம்பளக்காரங்க ரொம்ப பணம் வச்சிருப்பங்களோ. எவ்வளவு உழைக்கிறோம் என்பது பெரிதல்ல‌ அதை எப்படி செலவு செய்கிறோம்? அதில் ஏதாவது சேமிப்பு வைக்கிறோமா? அதுதான் முக்கியம் . என்னங்க நீங்க சொல்லுறிங்க??? என் சம்பளம் வீட்டு செலவுக்கே சரியா இருக்கும். அப்புறம் எங்கே சேமிப்பு? சேமிப்பு என்றால் என்ன? என் அகராதியில் செலவு செய்ய துவங்கும் முன்னே ஒரு தொகை. அது நூறு ஆயிரம் என்று இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை.ஐந்து வெள்ளி, இல்லை பத்து வெள்ளி முடியும். இது எல்லோராலும் முடியும். நீங்கள் ஐநூறு வெள்ளி சம்பளக்காரரா? மாதம் ஐம்பது வெள்ளி ஒதுக்குங்கள். செலவு பட்டியல் தயாரிக்க பழகுங்கள். செலவு பட்டியல் அதாங்க பட்ஜட். ஒரு கொடு போட்ட புத்தகம் வைத்துகொள்ளுங்கள். முதல் பக்கத்தில் பிள்ளையார் சுழி போடுங்கள் . இப்பொது செலவு பட்டியல் எழுத ஆரம்பிக்கலாம். முதலாவதாக சேமிப்புத்தான் எழுத வேண்டும். பிறகுதான் செலவு. மாத சேமிப்பு. 10, வீட்டுக்கு வங்கியில் செலுத்த 000/=, தண்ணீர்00/=, மின்சாரம்/=, ASTRO/=, பிள்ளைகளின் தினசரி சிற்றுண்டி பணம்/=, பள்ளி பேருந்து00/=, டியூஷன் 00/=, மருத்துவ செலவு 000/= உங்கள் மாத‌ செலவு எப்படி என்பதை வைத்து உங்கள் பட்டியல் தயாரிக்கவேண்டும். எங்கு துண்டு விழுந்தாலும் சேமிப்புக்கு என்று ஒதுக்கிய பணத்தில் கை வைக்காதீர்கள். என்ன சிரிக்கிரிங்க. பின்ன என்னங்க சேமிப்பு 10 வெள்ளி ஒதுக்கினேன்..... அதுல கை வைக்க கூடதுனா எப்படி??? அந்த பத்து வெள்ளியையும் கை வச்ச நம்ம எப்போ சேமிப்பை ஆரம்பிக்கிறது. உங்க மாத சம்பளம் செலவு அதன் அடிப்படையில்தான் இந்த பட்டியல். சேமிப்புத் தொகையை நீங்க முடிவு பண்ண‌லாம். நீங்க ஒரு ஆள் சம்பாத்தியம் என்றால் நீங்களும் மனைவியும் ஆலோசிக்கலாம். இருவரும் சம்பாதிப்பவர்களாக இருந்தால், சேமிப்பு தொகையை சற்றுக் கூட்டலாம். முடிந்தவரை பிள்ளைகளுக்கு முன் இந்த பட்டியல் ஆரம்பியுங்கள். பெற்றோர்களின் பணச் சுமை தெரியும். சிறுக சிறுக சேமித்தால்தான் பணம் பார்க்க முடியும். அசந்து உட்காரதீர்கள். காரியத்தில் இறங்கும் தருணம் இது. திட்டத்தை செயல் படுத்தும் நேரம். என்னங்க நீங்க‌ இது தீபாவளி மாதம். இந்த மாதத்தில் எப்படினு நீங்க கேட்பிங்க. ஆனால், எந்த மாதம் நமக்கு செலவு இல்லை. அப்படியே எதாவது ஒரு செலவு இந்த மாதத்தோடு முடியும் என்றால்... இன்னொரு செலவை அது அனுப்பிசிட்டுத்தான் போகும். எப்படினு கேட்டா??? இந்த மாதத்தோடு வங்கியில் காருக்கு செலுத்தும் கடன் முடிந்தது என்றால், வேறு ஒரு ரூபத்தில் புது செலவு வரும் இல்லை என்றால் நாமாகவே புதுசா எதையாவது இழுத்து வைப்போம். இது நிதர்சனமான உண்மை. அப்படி ஏதும் வராமல் இருந்தால் அந்த பணம் அடுத்தடுத்து வரும் மாதங்களில் எங்கே போகிறது என்றே தெரியாது. அதற்காக‌த்தான் இந்த செலவு பட்டியல். ஆனால், இந்த மாதிரி செலவு அதிகமா இருக்குற மாததில்தான் செலவு பட்டியல் துவங்கனும். அப்போ நம்ம திறமை என்னனு நமக்கு தெரியனும். அட இந்த தீபவளி மாதத்தில் நம்மளும் ஐமபது வெள்ளியை சேமிப்புக்கு எடுத்து வச்சிட்டோமே!!!. உங்களுக்கு நீங்களே தட்டிக் கொடுத்துக்கொள்வீர்கள். இப்போ இந்த சேமிப்பை எடுத்து வைக்க சொன்னேன் அல்லவா? அந்த கதைக்கு வருவோம். அதை தனியா எடுத்து எடுக்க முடியாத ஒரு உண்டியல் இந்த கோழி, யானை உண்டியல். அதுல போட்டு வைங்க. நினைத்ததும் எடுக்க முடியாது. உங்களுக்கு ஒரு கணக்கு இருக்கும் எந்த மாதத்தில் இந்த திட்டத்தை ஆரம்பித்தோம் என்று. உங்கள் சேமிப்பு தொகையும் எத்தனை மாதம் என்று கணக்கு இருக்கும் பட்சத்தில் நூறு... இருநூறு வெள்ளி என்று சேர்ந்திருக்கும்போது ஒரு வங்கி கணக்கு துவங்குங்கள். ஆனால் இந்த வங்கி கணக்கு புத்தகம் போதும் அட்டை வேண்டாம் . கவனம். அட்டை இருந்தால் கொஞ்சம் பணம் சேரும்போதே எதற்கோ செலவும் செய்ய சொல்லி மனசு அடிச்சுக்கும். மாத சம்பளம் தவிர உங்களுக்கு வரும் பிரிம், கூட்டு இந்த பணங்களிலும் கொஞ்சம் இதில் சேர்க்கலாம். நமக்கு, நம் குடும்பத்துக்கு அவசர தேவை இருக்கும்போது கையை பிசைந்த்துக் கொண்டிருக்க வேண்டாம். அடுத்தவர் கையை எதிர்ப்பார்க்க வேண்டாம். மருத்துவ செலவு சொல்லிக்கொண்டு வருவதில்லை. இந்த சேமிப்பில் இருந்து எடுத்து உபயோகித்துக்கொள்ளலாம். ஆனால், எதற்காக சேமிப்பில் இருந்து பணம் எடுத்தாலும் அடுத்தடுத்து வரும் மாதங்களில் உங்கள் சேமிப்பு தொகையை கூட்டிக் கொள்ள வேண்டும். எடுத்த பணத்தை மீண்டும் யாரிடமோ கடன் வாங்கியதாகவே நினைத்துக்கொண்டு செலுத்திவிடவேண்டும். ஒரு முறைதான் செலவு வருமா என்ன? அடுத்த முறை வரும் செலவுக்கு செம்மிப்பில் இருந்து எடுக்கலாம் என்று பார்த்தால் குறைந்திருக்குமே? முயற்ச்சித்து பாருங்கள். உடனே பணம் சேர்ந்துவிடாது. சிறு சிறுக சேமிக்க பழகிக்கொண்டால், நமக்கும் சேமிக்கும் பழக்கம் சுமையாக தெரியாது. சுகமாகத்தான் இருக்கும். முடிவு பண்ணுங்கள் இந்த தீபாவளிக்கு நான் ஒரு புதிய சேமிப்பை துவங்குகிறேன் என்று உங்களுக்கு நீங்களே சொல்லுங்கள் . சொன்னதை போலவே செயலில் இறங்குங்கள் . உங்கள் புதிய முயற்ச்சிக்கு எங்களின் வாழ்த்துக்கள்.