Monday, August 16, 2010

மனித உடல் உறுப்பு கடிகாரம்

அக்குபஞ்சர் சித்தாந்தபடி மனித உடலில் உள்ள முக்கியமான
12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 மணி நேரம் அதனுடைய
உயிர் சக்தி ஓட்டத்தின் உச்ச கட்ட இயக்கத்தில் இருக்கும். ஒரு
மனிதனின் உடல்நிலை நன்றாகவோ அல்லது நோய்வாய்படுவதோ
இந்த உயிர் சக்தி ஓட்டத்தின் தன்மையை பொறுத்ததேயாகும்.

அதிகாலை 3-5மணி ~‍ நுரையீரல்:

இந்நேரத்தில் எழுவது உடல் நலத்திற்கு மிகவும் நன்று.யோகாசனம்,
மூச்சுபயிற்சி, தியானம் போன்றவைகளை இந்நேரத்தில் செய்வது
மிகவும் நல்லது. காரணம் விடியற்காலை 3.30 மணியிலிருந்து 5 மணி
வரை வெட்ட வெளியில் அமுதகாற்று(ஓசோன்) ஒன்று வீசுகின்றது.
அந்த நேரத்தில் எழுந்து தியானம் செய்வதால் நாம் ஒரு புதிய
சக்தியைப் பெறுவோம். ஆஸ்துமா நோயாளிகளால் இந்த நேரத்தில்
தூங்க முடியாது. மூச்சுவிட இயலாது. சிரமப்படுவர்.

காலை 5-7மணி ‍~ பெருங்குடல் :

இந்நேரத்தில் கண்டிப்பாக எழுந்திருக்க வேண்டும். இந்நேரத்தில்
எழுந்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக மலச்சிக்கல் இருக்காது. மலம் கழித்து
குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். அதனால் நரம்புதளர்ச்சி ஏற்படாது.

காலை 7-9மணி ~‍ வயிறு :

கண்டிப்பாக இந்நேரத்தில் காலை உணவை முடித்திருக்க வேண்டும்.

காலை 9-11மணி ‍ ~ மண்ணீரல் :

மிகச்சிறிய சிற்றுண்டியோ, பானங்களோ அல்லது தண்ணீர்கூட
இந்நேரத்தில் சாப்பிடக்கூடாது. அப்படி ஏதாவது சாப்பிட்டால்
மண்ணீரலில் பாதிப்பு ஏற்பட்டு உடலில் உஷ்ணம் அதிகரிக்கும்.
மேலும் நாம் அந்நேரத்தில் உண்ணும் உணவு, நீர் ஆகியவை
வயிற்றில் ஜீரணிக்க நெடுநேரம் எடுத்துக்கொள்கிறது. உணவின்
ஜீரணத்தில் மண்ணீரலின் பங்கு பற்றிநமக்கு தெரிந்ததே. உணவு
சாப்பிட்டதும் ஏற்பட வேண்டிய சுறுசுறுப்பிற்கும், புத்துணர்விற்கும்
பதிலாக அசதியும், தூக்கமும் இந்நேரத்தில் அவர்களை ஆட்கொள்ளும்.
நாளடைவில் பசி குறையும். நீரிழிவு நோயளிகளுக்கு தொந்திரவு அதிகரிக்கும்
நேரமிது. (படபட‌ப்பு, மயக்கம், தூக்க கலக்கம் ஏற்படும்).

நண்பகல் 11-1மணி ~ இருதயம் :

கடினமாக வேலை ஏதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடித்து உடலை சாந்தப்படுத்திக் கொள்ளலாம். நகரத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் விழிப்புடன் இருக்கும் நேரமிது. காரணம் இந்த நேரத்தில்தான் இருதய நோயளிகளுக்கும், சக்கரை நோயளிகளுக்கும் மாரடைப்பு ஏற்படும் சாத்தியகூறுகள் அதிகம் இருக்கும். அத‌னால் அதை தவிர்க்க இவர்கள் இந்த நேரத்தில் படுத்து தூங்காமல் இருக்க வேண்டும். அப்படி தூங்கினால் அபான வாயு பிராண வாயுடன் கலந்து மாரடைப்பை ஏற்படுத்தும் அல்லது முகவாதம் அல்லது பக்கவாதம் அல்லது மூட்டுவாதம் மற்றும் உடல் வலிகள் நிச்சயம் தோன்றும்.

பகல் 1-3மணி ~‍ சிறுகுடல் :

மதிய உணவை முடித்து 3௫-5 நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். படுத்து உறங்குவதை இந்நேரத்தில் தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் 3-5மணி ~‍ சிறுநீர்ப்பை

பானங்களோ அல்லது தண்ணீரோ அருந்த உகந்த நேரம். முதுகுவலி, இடுப்புவலி வரும் நேரம்.


மாலை 5-7ம‌ணி ~ ‍ சிறுநீர‌க‌ம் :

வ‌ழ‌க்க‌மான‌ வேலையிலிருந்து விடுப‌ட்டு இர‌வுக்கு முன்பாக‌வே வீடு வ‌ந்து சேர‌வேண்டும். ரீன‌ல் பெயிலிய‌ர் முத‌ல் நீர்க்க‌டுப்பு வ‌ரை ஏற்ப‌டும்.

இர‌வு 7-9ம‌ணி ~‍ இத‌ய‌ மேலுறை :

இந்நேர‌த்தில் க‌ண்டிப்பாக‌ இர‌வு உண‌வை முடித்திருக்க‌ வேன்டும். மார்பு வ‌லி, பார‌ம், ப‌ட‌ப‌ப்பு தோன்றும்.

இர‌வு 9-11ம‌ணி ~‍‍‍ முன்று வெப்ப‌மூட்டி :

காலை முத‌ல் மாலை வ‌ரை உழைத்து க‌ளைத்த‌ ம‌னித‌ உறுப்புக‌ளுக்கு ஓய்வு த‌ர‌ வேண்டிய‌ நேர‌ம். இந்நேர‌த்திற்கு பின் க‌ண் விழித்திருத்த‌லோ, ப‌டிப்ப‌தோ கூடாது.


ந‌டுநிசி 11-1 ம‌ணி ~‍ பித்த‌ப்பை :

இந்நேர‌த்திற்குள் க‌ண்டிப்பாக‌ தூங்கிக் கொண்டிருக்க‌ வேண்டும். இந்நேர‌த்தில் விழித்திருந்தால், அடுத்த நாள் உங்க‌ள் முழு ச‌க்தியை இழ‌க்க‌ நேரிடும்.

மிக‌ அதிகாலை 1-3மணி ~ க‌ல்லீர‌ல் :

இந்நேர‌த்தில் ஆழ்ந்த‌ நித்திரையில் இருக்க‌ வேண்டும். இந்நேர‌த்தில் விழித்திருந்தால் க‌ண்டிப்பாக‌ க‌ண்ணின் பார்வை ச‌க்தி குறையும். உற‌க்க‌ம் பாதிக்கும் உட‌ல் அரிப்பு, ந‌மைச்ச‌ல் அதிக‌ரிக்கும்.

மேற்க்க‌ண்ட‌ நேர‌ங்க‌ளில் ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்களை கொண்ட‌வ‌ர்க‌ள் யோகாச‌ன‌ ப‌யிற்சிக‌ளை முறையாக‌ க‌ற்று ப‌ழ‌கி வ‌ந்தால் நோய்க‌ள் ஏற்ப‌டாம‌ல் குறைவ‌ற்ற‌ செல்வ‌த்தை பெறுவ‌ர்! ஏனெனில், நோய‌ற்ற‌ வாழ்வுதானே குறைவ‌ற்ற‌ செல்வ‌ம்!

ந‌ன்றி : யோக‌க்க‌லை ‍ ஆக‌ஸ்ட்'10
Dr. ஏ.எஸ் அசோக்குமார்-Ph.d., (Y.Sc)

No comments:

Post a Comment