Monday, March 1, 2010

ப(பி)டித்த கவிதைகள்


சே
யாரங்கே...

என் கல்லறையின்மீது நின்றுகொண்டு,

எனக்காகக் கண்ணீர் வடிக்கும் அந்த

மெழுகுவர்த்திகளை

அணைத்துவிடுங்கள்..

அழுகை-

எனக்குப் பிடிக்காத ஒன்று..


-எர்னஸ்டோ சேகுவேராவின் நினைவுகளுக்கு அர்ப்பணம்

*************

கொட்டும் மழையில்
நனைந்துதான்
வருகிறாய்!!
ஆனால், துளிகூட‌
ஈரமில்லை உன்
மனதில்!

******

என்
கண்ணிருக்குத்தான்
எத்தனை
வெட்கம்!
நீ விலகிச்
சென்ற பிறகுதான்,
அது வெளியே
எட்டிப் பார்க்கிறது.
********

பேசினால் என்ன
என்று நான் கேட்க,
பேசினால் தானா
என்று நீ கேட்க,
கரைவது காசு
மட்டுமல்ல,
என் காதலும்தான்.
**********

என் வாழ்க்கையை விட்டு
விலகி செல்ல நான்
உன் பாதையல்ல‌
உன் பாதங்கள்!

*********

ஞாபக மறதி!

குரங்காட்டியின்
கோல் பிடித்து தாண்டும்
குறங்கிற்கு
நினைவில் இல்லை
தான் கடல் தாண்டிச்
சென்ற கதையும்
ஒரு நகரம் அழித்த கதையும்.

நன்றி : குமுதம் 10.03.2010

No comments:

Post a Comment