
அகரம், உகரம், மகரம் ஆகிய மூன்றும் சேர்ந்ததுபிரணவ
மந்திரமான 'ஓம்'. இந்த பிரணவத்தின்
வடிவானவர் முருகப்பெருமான்.
முருகன் என்ற திருநாமத்தில் 'மு' எனும் எழுத்து
முகுந்தனையும்; 'ரு' ருத்திரனையும்; 'க' பிரம்மனையும்
குறிக்கும். ஆகவே முருகனை வணங்க மும்மூர்த்திகளையும்
வழிபட்ட பலன் கிடைக்கும்.
முருகனின் ஆருமுகங்கள் : ஆறு பருவ காலங்களையும்;
பன்னிரண்டு திருக்கரங்கள் பன்னிரண்டு மாதங்களையும்
குறிக்கின்றனவாம்.
முருகப்பெருமானின் மயில் பறவையை 'சுத்த மாயை'
என்றும், மயிலின் வாயிலுள்ள பாம்பை ' அசுத்த மாயை'
என்றும், மயிலின் கால்களில் உள்ள பாம்பை 'பிரக்ருதி
மாயை' என்றும் ஞான நூல்கள் குறிப்பிடுகின்றன.
முருகனின் கரங்களில் திகழும் ஈட்டி, கோடாரி, கத்தி, வில்,
பாசம், அங்குசனம், கொடி, வஜ்ரம், பாணம், மணி, தாமரை
ஆகிய பதினொன்றும் ஏகதாச ருத்ரர்கள் என்று ஞானநூல்கள்
கூறுகின்றன.
நன்றி : சக்தி விகடன்
(கே என் மகாலிங்கம் பாண்டிச்சேரி)
No comments:
Post a Comment