
கிரகங்கள் ஒன்பது. அதில் ராகு, கேது நீங்கலாக உள்ள 7
கிரகங்களுக்கு மட்டும் ஹோரை என்ற அமைப்பை ஏற்படுத்தி
உள்ளனர்.கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் அதனதன் சுற்று
வேகம், சுற்றுபாதை இவைகளுக்கு ஏற்றாற்போல் தங்குகிறதோ,
அதுபோல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகமும் இரண்டரை
நாழிகை, அதாவது 1 மணி நேரம் தங்கி வலம் வருகிறது.
அனைத்து பஞ்சாங்கங்களிலும் ஒவ்வொரு கிழமைக்கும் கால
ஹோரை நாழிகை விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அறிந்துக்
கொள்ள ஏதுவாக இந்த குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
காலையில் சூரிய உதயம் ஆரம்பம் ஆகும் பொழுது அன்றைய
தின கிழமையின் கிரகமே முதல் ஹோரை ஆரம்பமாகும். அதாவது
ஞாயிறு காலை 6 மணி முதல் 7 மணி வரை சூரிய ஹோரை
ஆரம்பம் ஆகும். திங்கள் அன்று சந்திர ஹோரையும், செவ்வாய்
அன்று செவ்வாய் ஹோரையும், புதன் அன்று புதன் ஹோரையும்,
வியாழன் அன்று குரு ஹோரையும், வெள்ளி அன்று சுக்கிர ஹோரையும்,
சனி அன்று சனி ஹோரையும் ஆரம்பமாகும். இந்த ஹோரைகளை அன்றைய
சூரிய உதயத்தில் இருந்துதான் கணக்கிட வேண்டும். ஒவ்வொரு
ஹோரையும் கொடுக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் உள்ளன.
ஒவ்வொரு ஹோரையை வைத்து, அது சுப ஹோரையாக இருந்தால்,
சுபகாரியங்களை ஆரம்பிக்கலாம்.
சூரிய ஹோரை : உத்தியோகத்தில் சேர, அது தொடர்பான
பெரிய அதிகாரிகளை பார்ப்பது, பத்திரங்கள், உயில் எழுத, சிபாரிசுகள்
பெற சூரிய ஹோரையில் செய்யலாம். புது வீடு குடி போகக்கூடாது.
சந்திர ஹோரை : வியாபாபரத் தொழில் தொடங்க மற்றும்
முக்கியமான வியாபாரங்கள் செய்ய, யாத்திரை, வெளிநாடு செல்லும் யாத்திரை
தொடங்க, இந்த ஹோரை சுபமாகும். கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சந்திரனாக
இருந்தால் இவைகளை விலக்கலாம்.
செவ்வாய் ஹோரை : செவ்வாய் ஹோரையில் சுபகாரியங்களை
விலக்குவது நன்று. எந்த காரியத்தை செய்யும்போதும், நாம் பேசுகின்ற பேச்சுக்களே
நமக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும்.
புதன் ஹோரை : தொலைத் தொடர்பு கொள்ள தந்தி, போன்,
பேக்ஸ்,இன்டர்நெட் ஆகியவைகளை உபயோகப்படுத்த நல்ல நேரம். வழக்கு,
வியாஜ்ஜியம் தொடர்பாக வக்கில்களைப் பார்க்க நல்ல நேரம்.கதை, கட்டுரைகள்
எழுத,ஜாதகம் பார்ப்பது கூட இந்த நேரத்தில் பார்க்கலாம். புதிய கணக்கு தொடங்கலாம்.
நிலம் வாங்க, பெண் பார்த்தல் பேசக்கூடாது.
குரு ஹோரை : எடுத்த காரியங்கள் அனைத்தும் நன்மை பயக்கும்.
முகூர்த்த நேரம் அமையும் போது குரு ஹோரையில் அமைவது மிகவும் விஷேசம்.
ஆடை ஆபரணங்கள் வாங்க, திருமாங்கல்யத்துக்கு பொன் வாங்க ஏற்ற நேரம். நகை
கடை வியாபாரிகள் இந்த நேரங்களில் கடை தொடங்கவும், பெரிய வியாபாரங்கள் செய்யவும் ஏற்றதாகும். முதல் விருந்து கூடாது.
சுக்கிர ஹோரை : சுப காரியங்களுக்கு ஏற்ற நேரம். திருமணத்திற்க்கு
பெண் பார்க்க சாந்தி முகூர்த்தம் செய்ய ஏற்ற நேரம். சுக்கிர ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் யாவும் செய்யலாம். விருந்து கொடுக்கவும், கொடுத்த கடனை வசூல் செய்யவும் முயற்சிக்கலாம். புதிய வாகனங்கள் வாங்க ஏற்ற நேரம். கடன் மட்டும் கொடுக்கக் கூடாது.
சனி ஹோரை : சனி ஹோரையில் வியாதிஸ்தர்கள் புதிதாக மருந்து உண்ணக்கூடாது. அவசியம் ஏற்ப்பட்டால் ஒழிய, மருத்துவமனைக்கு செல்லக்கூடாது. இந்த ஹோரை அசுப ஹோரை என்றாலும், நிலங்கள், மனைகள் வாங்க, விற்க முயற்ச்சிக்கலாம். அதுபற்றி பேசலாம். பிரயாணம் கூடாது.
செவ்வாய் ஹோரை, சனி ஹோரை, கிருஷ்ணபட்ச சந்திர ஹோரை ஆகியவைகள் அசுப ஹோரைகள் என்றும், குரு, சுக்கிர, சூரிய வளர்ப்பிறை சந்திரன் ஹோரைகள் சிறப்பாகவும் அமைக்கப்படுள்ளது.
குரு முதலில், அடுத்ததாக சுக்கிரன், அதற்கடுத்து புதன், அதற்கடுத்து சூரிய ஹோரை, கடைசியாக வளர்ப்பிறை சந்திரன் என்றும் வரிசைப்படுத்தப்படுள்ளது.
நன்றி : ஆன்மீகம் 11'2009
No comments:
Post a Comment