Showing posts with label மேதைகளின் வாழ்வில்.... Show all posts
Showing posts with label மேதைகளின் வாழ்வில்.... Show all posts

Friday, October 2, 2009

பணம் காய்க்கும் 'புகழ்' மரம்

உலக புகழ்ப்பெற்ற நாடக‌ ஆசிரியரான பெர்னாட்ஷாவை, இள‌ம் எழுத்தாளன்ஒருவன் சந்தித்தான்.

நான் அதிகம் சம்பாதிக்க வேண்டும். அதற்கொரு வழி சொல்லுங்களேன்" என்று கேட்டான்.

"அது ரொம்ப சுலபமாச்சே. நீ விரும்பும் தொழிலை தேர்ந்தெடு. அந்தத் தொழில் மூலம் 'புகழ்' என்னும் மரத்தை வளர்த்து வா. நிச்சயம் ஒரு நாள் இந்தப் புகழ் மரத்தில் பணம் காய்க்கும். அப்போது அதைப் பறித்து பயனடையலாம்!" என்று புன்னகையுடன் சொன்ன பெர்னட்ஷா மேழும் தொடர்ந்தார்:

"ஆனால் ஒரு விஷயம்... பணம் என்னும் பழங்களை பறித்து சாப்பிட ஐந்து விநாடிகள்கூட ஆகாது. ஆனால், புகழ்' என்னும் ,மரத்தை வளர்க்க பல ஆண்டுகள் ஆகலாம்!" என்றார்.